துப்புரவு அறிதல்

டிசம்பர் 27, 2007 at 7:17 மு.பகல் (Article)

அனைவரும் சமம், இருப்பதை பொதுவாக்க வேண்டும் என்ற கோஷங்கள் ஒரு புறம் அறிஞர்களாலும், தலைவர்களாலும் மேடைப் பேச்சுகளிலும் எழுத்துக்களிலும் வலியுறுத்தப்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது. ஆயினும். சமூகத்தில் கீழ்தட்டு மக்களின் வாழ்க்கைநிலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர்களால் அதிகமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தினர், சுதந்திரத்திற்குப் பின்னரும் அதே நிலையில் நீடித்து வருவது வேதனைக்குரிய விஷயமாகவே உள்ளது.

நமது சமூகத்தில் ஒரு சாராருக்கு மட்டும் கிடைத்து வரும் வாழ்க்கையின் இன்பங்கள், மற்றொரு சாராருக்கு மறுக்கப்பட்டு வருவதை மறுக்க இயலாது. வளர்ந்துவரும் இன்றைய சமூகத்திலும் கீழ்நிலையில் உள்ளவர்கள் காலங்காலமாக ஒரு மனிதன் செய்யத் தயங்கும் வேலை நிலைகளில் தொடர்ந்து ஈடுபடுவது என்பது தடை செய்யப்படாத ஒன்றாகவே நிலவி வருகிறது.

தலைமுறைத் தலைமுறையாக இத்தகைய கீழ்நிலை மக்கள் துப்புரவுப் பணிகளை செய்யும் ஒரு இயந்திரமாகவே மாற்றம் பெற்று விட்டனர் என்பதே வருத்தத்திற்குரிய உண்மையாக உள்ளது.

இந்த வேலைகளை இவர்கள் செய்ய முற்படும்போது ஏற்படும் வலிகளையும், இவர்களின் சந்ததியினர் எதிர்கொள்ளும் இழிநிலைகளையும் சொல்கிறது ‘துப்புரவு அறிதல்’ என்ற குறும்படம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கன்னியப்பன் என்ற மலம் அள்ளும் தொழிலாளிக்கு எதிரில் ஒருவர் வந்து அமர்ந்தவுடனேயே அவருக்கு கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது. காரணம் என்னவாக இருக்கும்?

அவரின் நினைவலைகளுடனேயே நம்மையும் பயணிக்க வைக்கிறார் இயக்குநர். மருத்துவமனையில் தன்னுடைய மனைவியுடன் சிகிச்சைக்காக செல்கிறார் கன்னியப்பன். அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், அவர் செய்யும் மலம் அள்ளும் வேலையைத் தொடர்வதும், அந்த வேலையின் பொருட்டு மது அருந்துவதும் தொடர்ந்தால், அது அவரின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என்று அறிவுறுத்துகிறார்.

மருத்துவரின் ஆலோசனையையும், மனைவியின் எடுத்துரைத்தல்களையும் உதாசீனம் செய்யும் கன்னியப்பன் குடிப்பதையும், மலம் அள்ளுவதையும் தொடர்கிறார்.

ஒருநாள் ஓய்வுடன் அவர் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருக்கும்போது, மனிதர் கழிவை மனிதர் அள்ளுவதை நிறுத்த வலியுறுத்தி கோஷங்கள் போடும் ஒரு சிலரை பார்க்க நேரிடுகிறது. தங்களின் நன்மையைக் கருதி அவர்கள் போராடுவதை பார்க்கும் கன்னியப்பன்  தங்களின் பிழைப்பில் மண் அள்ளிப் போடுவதாக அவர்களைப் பற்றி தன் நண்பனிடம் ஏளனம் செய்கிறார்.

வங்கியில் பணிபுரியும் ஒருவர் உள்பட போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் காவல்துறையினர் அந்த இடத்தில் இருக்கும் கன்னியப்பனையும் கைது செய்கின்றனர். அங்கேயும் உயரதிகாரி ஒருவரின் வீட்டில் அடைத்திருக்கும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கையுயர்த்துகிறார் கன்னியப்பன்.

இதையடுத்து உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கன்னியப்பன், மலம் அள்ளுபவர்களின் வாழ்விற்காக போராடியவர்களில் ஒருவரான, வங்கி ஊழியரின் வருகையைக் கண்டே கண்ணீர் வடிப்பதாக நகர்கிறது படம்.

மருத்துவமனைக்கு வரும் அந்த வங்கி ஊழியர், கன்னியப்பனின் மனைவிக்கு ஒரு பள்ளியில் வேலை வாங்கித் தந்துள்ளதாகவும், அவரின் குழந்தையின் பள்ளிப் படிப்பை கவனித்துக் கொள்வதாகவும், அவருக்கும் நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறுகிறார். இந்த அளவில் கதை முடிவடைகிறது.

துப்புரவுப் பணியாளர்களின் வேதனைகளைச் சொல்லும் இந்தக் குறும்படம், அவர்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் இழிநிலைகளையும் கூற முற்பட்டுள்ளது. கன்னியப்பனின் மகன் பள்ளியில் அறிமுகம் செய்துக் கொள்ள நேரும்போது, தன்னுடைய தந்தை மலம் அள்ளுகிறார் என்று சொல்லத் தயங்குவதையும், அவ்வாறு கூறியவுடன் கூட இருக்கும் மற்ற மாணவர்கள் நகைப்பதையும், குறும்படம் அதன் போக்கில் கூறியுள்ளது. இது மலம் அள்ளுபவர்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் வேதனைகளுக்கு ஆளாவது குறித்த மறுகோணத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

மேலும் இறுதியில் வங்கி ஊழியர் மூலம் தன்னுடைய வாழ்க்கைக்கு புதிய வழி கிடைப்பதையும், தன்னுடைய மனைவி மற்றும் மகன் போகும் பாதையில் பிரகாசமான ஒளி தெரியும் வகையிலும் இயக்குநர் படம் பிடித்துள்ளார்.

‘ஒரு மனிதனின் மலத்தை இன்னொரு மனிதன் அள்ளுவது பாவம், கொடுமை, நான் இன்னொரு முறை பிறக்க நேரிட்டால் அவர்களின் வீட்டில் பிறந்து, அவர்களை மனிதத் தன்மையற்ற இத்தகைய கொடுமைகளிலிருந்து மீட்பேன்’ என்ற காந்தியடிகளின் வாசகங்கள் மற்றும் மலம் அள்ளுபவர்களின் பணிச்சூழல்களை புகைப்படங்களின் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பது நல்ல முயற்சி.

மலம் அள்ளுவதை தேவத் தொழிலாகச் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும், அதை எதிர்த்துக் கோஷங்களும் வலுத்துவரும் இன்றைய காலக்கட்டத்தில் வெளிவந்துள்ள இந்தக் குறும்படம் சமுதாயத் தீமைகளை கூற முற்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதே. ஆயினும் மலம் அள்ளும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் சார்பாக வெளிவந்துள்ள இந்த குறும்படம் அவர்களின் வலியை இன்னும் ஆழமாகக் கூற முற்பட்டிருந்தால், மற்றவர்களின் கழிவுகளை அள்ளும் அவர்களின் வாழ்வில் ஒளி கண்டிப்பாக மலர்ந்திருக்கும்.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

நாகரிகத்தின் பிடியில் நாணயத்தை இழக்கலாமா?

டிசம்பர் 13, 2007 at 12:57 பிற்பகல் (Article)

ðˆ¶ Ý‡´èÀ‚° º¡¹õ¬ó, 𮈶 ð†ìî£Kò£õ¶, ä‰Fô‚è ê‹ð÷ˆF™ å¼ «õ¬ô¬òˆ «î®‚ ªè£œõ¶, i†´ «õ¬ôè¬÷ ªêŒ¶ ªè£‡´‹, °ö‰¬îè¬÷Š ð£˜ˆ¶‚ ªè£‡´‹, î¡ î£Œ îò¬ó èõQˆ¶‚ ªè£‡´‹ i†«ì£´ Þ¼‚è‚îò å¼ ªð‡¬í ñ퉶 ªè£œõ¶, ÜFèð†ê‹ ªê£‰îñ£è å¼ i´ õ£ƒ°õ¶, õ£›‚¬è¬ò Þ‰î Ü÷M™ ꉫî£ûñ£è õ£›õ¶… Þ¶«õ ð®ˆî Þ¬÷ë˜èO¡ èùõ£è Þ¼‰¶ õ‰î¶.

 

܉Gò ºîh´èœ Þ‰Fò£M™ ÜÂñF‚èŠð†ìî¡ M¬÷õ£è ð¡ù£†´ GÁõùƒèœ Þ‰Fò£MŸ°œ ð¬ìªò´‚èˆ ªî£ìƒAò¾ì¡ «ñŸÃPò Þ¬÷ëQ¡ èù¾èO™ ñ£Ÿøƒèœ ãŸð†´œ÷ù. ®AK º®‚A«ø£«ñ£ Þ™¬ô«ò£, ݃AôŠ ¹ô¬ñ Þ¼‰î£™ «ð£¶‹- Þ¼¬è c†® õó«õŸè ïèK¡ HHæ‚èÀ‹ 裙 ªê¡ì˜èÀ‹ ñŸÁ‹ ðô GÁõùƒèÀ‹ îò£ó£è àœ÷ù.

 

݇èÀ‹, ªð‡èÀ‹ «ð£†® «ð£†´‚ªè£‡´ «î˜‰ªî´‚°‹ Þ‰î «õ¬ôèO™ ¬èG¬øò ê‹ð÷‹ A¬ìˆ¶ M´Aø¶. Üõ˜èO¡ èŸð¬ù‚° â†ì£î àòóˆF™ Þ‰GÁõùƒèœ Þõ˜è¬÷ GÁˆF ¬õˆ¶ «õ®‚¬èŠ ð£˜‚A¡øù. Þ‚ è£óí‹, ªõOèO™ Þ‰î «õ¬ôèÀ‚° Ü÷¾‚èFèñ£ù ºîh´ ªêŒò «õ‡´‹. Þ‰Fò£ «ð£¡ø õ÷˜‰¶õ¼‹ èO™ Þ‰î «õ¬ôèÀ‚è£ù ºîh´ °¬ø«õ.

 

è™ÖK, ðœO èO™ ä‰FŸ°‹ ðˆFŸ°‹ ªðŸ«ø£K¡ ¬è¬ò âF˜ð£˜ˆ¶ õ£¿‹ Þ¬÷ë˜èO¡ ¬èèO™ Ü÷¾‚èFèñ£ù ðí‹ A¬ì‚°‹«ð£¶, ܶ Üõ˜èO¡ õ£›‚¬èŠ ð£¬î¬ò ñ£ŸP ܬñ‚Aø¶. Ãì«õ ݃Aô «ñ£èº‹ ެ퉶 ªè£œ÷ Þó‡´‹ «ê˜‰¶ ܬñFò£ù ꉫî£ûñ£ù õ£›‚¬è â¡ø ªè£œ¬è ñ£P, ⃫軋 ⊫𣶋 ꉫî£û‹ â¡ø G¬ô‚° Þ¬÷ë˜èœ ªê™ô å¼ è£óíñ£è ܬñ‰¶ M´Aø¶.

 

î¬ôº¬ø Þ¬ìªõOèÀ‹ «ð£†®Š «ð£†´‚ ªè£‡´, ÜÂðõƒèÀ‚° º‚Aòˆ¶õ‹ îó£î ñùG¬ô‚° Üõ˜è¬÷ˆ îœÀAø¶. Þîù£™ ªðŸ«ø£˜èœ Hœ¬÷èO¡ ï™õ£›‚¬è‚è£è ÃÁ‹ â‰î Ý«ô£ê¬ùè¬÷»‹ è£F™ «ð£†´‚ ªè£œ÷£î G¬ô»‹ Üõ˜èÀ‚° õ‰¶M´Aø¶.

 

ªð¼‹ð£½‹ Þó¾ «ïóƒèO™ ÜFèñ£è ªêò™ð´‹ Þ‰î GÁõùƒèœ, õ£ó ÞÁFJ™ Ü«ïèñ£è M´º¬ø ÜOˆ¶M´Aø¶. Þîù£™ ïèóƒèO™ ‘i‚⇆ 𣘆®èÀ‹’ ÜFèKˆ¶ õ¼A¡øù.

 

êÍè‚ è†´Šð£´è¬÷ ªõ†®ªòP‰¶M†´, ªõO´ «ñ£èˆF™ ݇ ªð‡ MˆFò£êI¡P ðö°‹ Üõ˜èœ F¼ñíˆFŸ° º¡«ð àì™ àøM™ ß´ð´õî£è¾‹, Üî¡ è£óíñ£è 輂è¬ôŠ¹èœ ÜFèKˆ¶œ÷î£è¾‹ ÝŒ¾ º®¾èœ ªîKM‚A¡øù. â‰î Ü÷MŸ° îèõ™ ªî£N™¸†ðˆF™ àôè èÀ‚° Þ¬íò£è õ÷˜‰¶ õ¼A«ø£«ñ£ ܉î Ü÷MŸ° ⌆v «ï£ò£™ ð£F‚èŠð†«ì£˜ â‡E‚¬èJ½‹ àò˜‰¶ªè£‡«ì ªê™½‹ Üð£òº‹ ãŸð†´œ÷¶.

 

Þˆî¬èò èô£„ê£ó ñ£ŸøƒèOù£™, Þ¬÷òî¬ôº¬øJù˜ ð£F‚èŠ ð†´œ÷ êeðè£ô ê‹ðõƒèœ àî£óíñ£è àœ÷¶. ªð‡èÀ‹ ݇èÀ‹ Þó¾ ðè™ ð£ó£ñ™ îƒèœ «õ¬ô «ïóƒè¬÷ ܬñˆ¶‚ ªè£œõî¡ Íô‹ ðô ð£Lò™ õ¡º¬ø ñŸÁ‹ ªè£¬ô„ ê‹ðõƒèÀ‹ ïì‰îõ‡í‹ àœ÷ù. ÞóM™ î¡ù‰îQò£è õ£èùƒèO™ ªê™ô «õ‡®ò è†ì£òˆFŸ° Ý÷£°‹ ªð‡èœ ðŸPò ªêŒFèœ ï‹¬ñ èô‚èºø„ ªêŒA¡øù.

 

«ñ½‹ Þˆî¬èò ðEèO™ àœ÷õ˜èœ ñùgFò£ù ñŸÁ‹ àì™gFò£ù «ï£ŒèÀ‚° àœ÷£õ¶‹ êÍè Ü„²Áˆî™èO™ 塸£è àœ÷¶.

 

èEQ ªî£ì˜ð£ù Þˆî¬èò «õ¬ô õ£ŒŠ¹è÷£™, Þô‚Aò‹ àœO†ì ð™«õÁ ¶¬øèO™ îƒèœ õ£›‚¬èŠ ð£¬î¬ò ܬñˆ¶‚ ªè£œÀ‹ M¼Šð‹ Þ¬÷ò î¬ôº¬ø‚° Þ™ô£ñ™ «ð£ŒM†ì¶. ªð¼Aõ¼‹ «õ¬ôõ£ŒŠ¹è÷£™ õ÷¼‹ °ö‰¬îèÀ‹ CÁõòF«ô«ò è‹ŠÎ†ì˜ èŸÁ‚ ªè£œ÷«õ ªðŸ«ø£˜è÷£™ õL»ÁˆîŠð´A¡øù˜. Þîù£™ è¬ô꣘‰î ÜPM¬ù»‹, ÜöAò™è¬÷»‹, ð‡¬ìò ñ‚èœ ïñ‚è£è «î®ˆî‰î Ýù‰îƒè¬÷»‹ Þö‰¶, àì™ à¬öŠ¹ì¡ Ã®ò M¬÷ò£†´è¬÷»‹, îƒèœ °ö‰¬î¬ñ¬ò»‹ ªî£¬ô‚°‹ G¬ô‚° Üõ˜èœ Ý÷£A¡øù˜.

 

Þ‰î Mîñ£ù 般î êeðˆF™ îIN™ ªõOò£ù ‘èŸø¶ îI›’ â¡ø F¬óŠð캋 õL»ÁˆFò¶. ð¡ªù´ƒè£ôñ£è Þ‰î ñ‡E™ «õÚ¡Pò îIö£™ âOî£èŠ ªðøº®ò£î ªê™õˆ¬î»‹, ðîM ñŸÁ‹ ªê£°ê£ù õ£›‚¬è¬ò»‹, Þ¼ð¶ ݇´èÀ‚° º¡¹ õ‰î è‹ŠÎ†ì˜ ªè£´Šð¬îŠ ðŸPò ãó£÷ñ£ù îINô‚Aò ñ£íõ˜èO¡ °ºø™ Ü‰îˆ F¬óŠðìˆF™ ªõOŠð´ˆîŠð†ì¶.

 

îèõ™ ªî£N™¸†ð‹ ê‹ð‰îŠð†ì «õ¬ôèOù£™ õ£›‚¬è„ Åö™èO™ ñ£ŸøˆFŸ° à†ð´ðõ˜è÷£™ ð£F‚èŠð´õ¶, ÞF™ CP¶‹ ê‹ð‰îŠðì£î «õªø£¼ õ£›‚¬è„ ÅöL™ õ£ö «ï¼‹ ï´ˆîó õ˜‚èˆFù«ó. Þˆî¬è«ò£ó¶ ªê™õ‚ °MŠHù£™ ãÁ‹ ªð£¼†èO¡ M¬ôõ£C, i†´ õ£ì¬èèœ ñŸÁ‹ ñ¬ùèœ-è†ììƒèO¡ M¬ôàò˜¾ «ð£¡ø¬õ Þõ˜è¬÷ G¬ô°¬ôò ¬õˆ¶ õ£›‚¬èJ¡ MO‹H™ GŸè ¬õˆ¶M´Aø¶.

 

âF½‹ ñ£Ÿøˆ¬î M¼‹¹‹ Þ¬÷ò î¬ôº¬øJù˜ îƒèÀ¬ìò M¼Šðƒè¬÷ ñ£ŸP‚ ªè£œõî¡ Íô«ñ Þˆî¬èò õ£›‚¬è º¬øèO™ ñ£Ÿøƒèœ ãŸð´‹. êÍè ÜcF‚° âFó£è ªó÷ˆFó‹ ðöè «õ‡®ò õòF™ bò ðö‚èõö‚èƒè¬÷Š ðö°õ¬î M´ˆ¶ îƒèœ ìƒè¬÷ õ£›M¡ à‡¬ñò£ù ꉫî£ûƒèO¡ð£™ F¼ŠH, ïñ¶ êÍè èô£„ê£óƒè¬÷ «ñ‹ð´ˆî¾‹, Þô‚Aò C‰î¬ùè¬÷ õ÷Šð´ˆF‚ ªè£œ÷¾‹ î¬ôŠð†ì£™ ñ†´«ñ Ý«ó£‚Aòñ£ù èô£„ê£ó ð‡ð£†´ õ£›Mò™è¬÷ à¼õ£‚A‚ ªè£œ÷ º®»‹.

 

 

-ÿð£

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

கொடிது கொடிது ஏகாந்தம் கொடிது. . .

டிசம்பர் 1, 2007 at 1:20 பிற்பகல் (Article)

அன்னிய மோகத்தில் நமது கலாச்சார ரீதியான வாழ்க்கையை இழந்துக் கொண்டிருக்கிறோம். அன்று நம் நாட்டினர் வாழ்ந்த இயற்கையோடியைந்த வாழ்க்கையையும் உணவே மருந்து என்ற பழக்கத்தையும் தொலைத்துவிட்டு, பலவகையான உடல்நலம் மற்றும் வாழ்க்கைக் குறைகளையும் வைத்துக் கொண்டுத் தவிக்கும் நிலையை அடைந்திருக்கிறோம். வெளிநாட்டினரே நம்முடைய யோகா, உணவே மருந்து முறைகளை எண்ணி வியந்து வரும் வேளையில் நாம் அதையெல்லாம் தொலைத்துவிட்டிருக்கிறோம்.

இதேபோன்று, வயதானவர்களின் அனுபவங்களையும், அவர்களின் ஆலோசனைகளையும் ஏற்கும் மனநிலை அற்ற நிலையில் அவர்களை உதாசீனப் படுத்திவருகிறோம்.

வயதானவர்கள் பூமிக்குப் பாரம் என்று கூறி அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு பின்பு உண்மையை உணர்ந்து மனம் வருந்திய மன்னனின் கதைகளைப் படித்திருந்தாலும், அந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை இன்றி வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் மாறிவரும் சூழ்நிலைகளில் ஆண்களும் பெண்களும் பணத்தைக் குறிவைத்து தங்களது வாழ்க்கையோடில்லாமல் அடுத்தத் தலைமுறைகளின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வருகிறார்கள். இத்தகைய சூழலில் சென்றத் தலைமுறையினரைப் பற்றிய நினைவு ஏற்படுமா? யோசிக்கத் தக்க விஷயம்தான்.

தற்காலத்திய சூழலில் நகரப்புறங்களில் வாழும் வயதானவர்களாவது, மாறிவரும் கலாச்சார மாற்றங்களுக்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை சூழல்களை மாற்றிக் கொள்ளத் தலைப்படுகின்றார்கள். ஆனால் கிராமப்புற வாழ் வயதானவர்களின் நிலையை நினைத்தால் கவலை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தான் பெற்ற மகனோ மகளோ நகர்ப்புறங்களிலோ, வெளிநாடுகளிலோ வாழ நேரும்போது, வயதானவர்களுக்கு தங்கள் கணவனோ, மனைவியோ தான் துணை. ஆனால் அந்தத் துணையும் தன்னுடன் இல்லாத சூழல் ஏற்படும்போது தனிமை என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது.

வாழ்வின் இறுதி நாட்களில் துணையை எண்ணி ஏங்கும் நிலை பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆண்கள் தன்னுடைய தேவைகள் அனைத்திற்கும் பெரும்பாலும் பெண்களையே சார்ந்து வாழப் பழகியிருப்பதே.

தன் வயதான காலத்தில் தனிமையில் வாழ நேரும் பெண்களுக்கு இந்தக் கவலை ஏற்படாததற்குக் காரணம், வயதான காலத்தில் கணவன் உள்பட தமது உற்றாருக்கு பணிவிடை செய்யாமல் சுதந்திரமாக இருக்க இயலும். தன்னுடைய வாழ்க்கையை தானே அனுபவித்து வாழ முடியும் என்பதே.

ஆனால் எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் வகையில் வளர்க்கப்படும் ஆண்களின் நிலை- அதிலும் வயோதிக ஆண்களின் நிலை கேள்விக்குறியாகவே மாறிவிடுகின்றது.

இவ்வாறு வயோதிகத்தில் தனிமையில் வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படும் ஆணின் நிலையைக் குறிப்பிடும் வகையில் வந்துள்ள குறும்படம் தான் பி.எல்.முத்தையா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘தனிமை’. இரண்டரை நிமிடமே திரையில் ஓடக்கூடிய இந்த குறும்படம் பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எண்ணிக்கையிலடங்காது.

செட்டிநாடு கலாச்சார அமைப்புள்ள பெரிய வீட்டினுள் தனிமையில் தன்னுடைய வயோதிகத்தைக் கழிக்க நேரும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சொக்கலிங்கம் செட்டியார் தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து செய்துள்ளார்.

கதவு திறக்கிறது. கதவின் தாழ்ப்பாள், வீட்டின் விளக்கு முதலியவை ஆடி அடங்குகிறது. மாத்திரை, மருந்து, மூக்குக்கண்ணாடி முதலியவைக் காட்டப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வயதான சொக்கலிங்கம் காட்டப்படுகிறார். தொடர்ந்து நகரும் திரை நம்மை அவரின் இளமைக்கால புகைப்படங்கள், மனைவி, சொந்த பந்தங்கள், வாரிகள், நண்பர்கள் ஆகியவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின்பால் நம்மை இட்டுச் செல்கிறது. சாப்பிடாமல் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவு, தொடர்ந்து வானத்தை வெறிக்கும் சொக்கலிங்கம் தொலைப்பேசி அழைப்பிற்கு பதில் சொல்லிவிட்டு தன்னுடைய நாற்காலியில் அமர்ந்து பின்பு விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்திருக்கும் சொக்கலிங்கம் என்று தனிமையின் ஏக்கத்தை பலவிதங்களில் சொல்லத் தலைப்பட்டிருக்கிறது.

இந்த அளவில் முடிவுறும் இந்தக் குறும்படம் உணர்த்திச் செல்லும் அர்த்தங்கள் ஏராளம். இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சொன்ன ஒளவை மட்டும், தொடர்ந்து அரசவைகளுக்கு சென்று மன்னர்களை சந்தித்து தன்னை எப்போதும் எல்லோரிடத்திலும் இணைத்துக் கொண்டிருக்காவிட்டால் கொடிது கொடிது ஏகாந்தம் கொடிது என்றே கூறியிருப்பார்.

வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றி வாழ்ந்து வந்த தன்னுடைய மனைவி மற்றும் சுற்றத்தார் அனைவரும் தன்னைவிட்டு நீங்கிய நிலையில் பழையக் காலங்களை அசைப்போட்டபடி எத்தனை நாட்களைத்தான் கழிப்பது என்ற ஏக்கம் சொக்கலிங்கத்தின் நடிப்பில் எதிரொலிக்கிறது. தனிமையுடன் கூடிய வயோதிகத்தில் நோயும் கூட்டு சேர்ந்தால் நடப்பது என்ன என்பதை சொக்கலிங்கம் நடித்துக் காட்டியுள்ள விதம் கவனத்தில் கொள்ளத் தக்கது.

சொக்கலிங்கத்தின் இளமைக்காலப் புகைப்படத்தைக் காட்டிய இயக்குநர், உடனே தற்போதைய நிலையையும் காட்டியுள்ள விதம் குறித்தற்குரியது. இளமைப் புகைப்படத்தில், அதற்கேயுரிய பெருமிதம் மேலுற தெரியும், அவரின் தற்போதைய நிலையில், ஆற்றாமையும், இயலாமையும் வெளிப்படும் விதத்தில் படமாக்கியுள்ள விதம், சிறிய இடங்களிலும் தன்னுடைய கவனங்களை சிதறவிடாமல் இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்று.

வானத்தை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் சொக்கலிங்கத்தை காட்டியிருப்பது, தனிமைவாழ் வயோதிகரின் நிலையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

உணர்வுரீதியான இந்தப் படைப்பை தரமான முறையில் கொடுத்துள்ள இயக்குனருக்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

        -ஸ்ரீபா

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

கனவுகள் மெய்ப்படும் காலம்….

டிசம்பர் 1, 2007 at 1:17 பிற்பகல் (Article)

பழமையும் கலாச்சாரமும் நிறைந்துள்ள வரலாற்றைக் கொண்டது தமிழ்நாடு. தமிழ் இலக்கியங்களும் இலக்கிய ஆசிரியர்களும் தொடர்ந்து இந்த மரபை கட்டிக் காத்து வந்துள்ளனர். அந்த வழியில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் வழக்கில் இருந்த மருமக்கள் வழிச் சமூகத்தில் வாழ்ந்த நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்வியல் நெறிகளையும், மாறிவந்த சமூகத்தில் அவர்களின் வழித்தோன்றல்கள் சந்திக்க நேர்ந்த பிரச்சனைகளையும் ஒரு குடும்பத்தின் கடைசி வாரிசின் வழி சொல்ல முற்பட்டிருக்கிறது இந்த புதினம்.

அதோடு நின்று விடாமல் இத்தகைய சமூகத்தில் வாழ்ந்த ஒரு பெண் எவ்வாறு தனக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகளையும் தடைகளையும் மீறி பொது வாழ்க்கையில் சாதிக்க முற்படுகிறார் என்பதையும் அவரது வாழ்க்கையோடு இயைந்து கூறியுள்ளது.

உயரிய சிந்தனைகளும் நல்ல பழக்கவழக்கங்களும் சமூக சிந்தனையும் கொண்ட ஒரு தந்தையின் வழிகாட்டுதலில் சகோதர சகோதரிகளுடன் வாழும் ஒரு பெண்ணின் குழந்தைப் பருவத்தையும், உறவுச்சூழலில் அவளுக்குக் கிடைக்கும் அருகாமைகளும், கால மாற்றத்தால் அவளுக்குக் கிடைக்கும் சிறுமைகளும், கதகதப்புக்கு துணைபுரிந்த உறவுகளின் மூலம் அவள் மற்றும் அவளுடைய அன்னை இருவரும் சந்திக்கும் நெருக்கடிகளும், அதை உடைத்தெறிந்துவிட்டு புத்தகங்களின் உதவியால் தன்னுடைய பாதையை பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணிக்கத் துணியும் அவள், அரசியல் வாழ்வில் சாதனைகள் புரிந்து எவ்வாறு மனதாலும் செயலாலும் உயர்கிறாள் என்ற வாழ்க்கை வரலாற்றை கூறும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது இப்புதினம்.

“ஓ, என்னைப்போயி அதிகாலைப் பறவை – அதாவது இங்கிலீஷில் ணிணீக்ஷீறீஹ் தீவீக்ஷீபீ ம்பாங்க – அப்படிங்கற நீ. ரொம்ப சந்தோஷம்தான்மா எனக்கு. நான் அந்த அதிகாலைப் பறவையாக கூவி விட்டாலும், கொஞ்ச நேரத்திலே எல்லாப் பறவைகளும் முழிச்குக்கும். பொழுது விடியும், அதாவது சமுதாயம் மாறும்……..”

இந்த வரிகளில் சமூகத் தேடல்களைக் கொண்ட இந்தப் பெண், கட்டுப்பாடுகள் நிறைந்த பெண்களின் முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்பதோடு நில்லாமல் மாதர் சங்கம் அமைப்பதன்மூலம் மொத்த பெண்களின் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக விளங்க முற்படுகிறார்.

சுதந்திரக் காலகட்டத்தில் இவ்வழி சமூகத்தினரின் வாழ்க்கை மாற்றங்கள் குறித்தச் செய்திகளைக் கூறமுற்படும்போது, எவ்வாறு சொத்துக்கள் மருமகன்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பனப் போன்ற செய்திகள் ஒப்பீட்டு ஆய்வுக்கு துணை செய்யும்.

கதையின் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான கதைகளும் பாடல்களும் கதையில் விரவிக் காணப்பெறுகிறது. குழந்தைகளுக்கே உரிய ஆரவாரங்களையும் அவர்களின் உலகத்தின் தனித்தன்மைகளும் நிறைந்துக் காணப்படுகிறன. அவர்களுக்கான விளையாட்டுகள், அவர்களின் பார்வையில் உறவுகள் முதலியக் கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. குழந்தைகள் தூங்குவதற்காக கூறுவதாக வரும் இந்தக் கதைகள் நம்மையும் தாலாட்ட தவறவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பக்கால அரசியல் நுழைவுகள், அதன் கோட்பாடுகள், சிறப்புகள், கேரளாவில் அதன் ஆதிக்கங்கள், அதற்காக அதன் உறுப்பினர்களின் மெனக்கெடல்கள் முதலியவையும், அந்தக் கட்சியின் கோட்பாடுகளைக் கூறும் புத்தகங்கள் குறித்தக் குறிப்பும் படிப்பவர்களை ஈர்க்கும். இரண்டாம் உலகப்போர் குறித்த செய்திகளும், அதன்போது போர் நடந்த இடங்களில் மக்கள் பட்ட துன்பங்களையும் எடுத்துரைப்பது கண்டிப்பாக வரலாற்று மாணவர்களுக்கு துணைபுரியும். நந்தன் போன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எவ்வாறு உதாரணப் புருஷர்களாக வாழ முற்பட்டனர் என்பதும் குறிக்கப்பட்டுள்ளன.

கூடி வாழ்ந்த உறவுகள் எவ்வாறு சொத்துக்காகவும் மற்ற சில காரணங்களுக்காகவும் கசப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டன என்பதையும், உயர்ந்த குணங்களைக் கொண்ட தந்தைக் கதாப்பாத்திரத்தைக் கூறி அவர்களின் குழந்தைகளின் எதிரிடை நிலையையும் தெளிவிப்பது போன்ற வாழ்க்கைக் குறிப்புகள் உளவியல் ரீதியாக அணுகத் தக்கன.

ஆறு குழந்தைகளுக்குத் தாயாகவும், கணவன் மற்றும் தன் உறவுகளை மட்டுமே தன் வாழ்க்கையென கருதி வாழும் தாய் கதாபாத்திரமும் எண்ணுதற்குரியது. நான்கு சுவர்களுக்குள்ளே தன்னுடைய உலகம் என்று வாழும் இவரது எல்லைகள் விரிகின்றது என்பதும் கதையின் ஊடாக கூறப்பட்டுள்ளன. வாழ்க்கை நெருக்கடிகள் இவரைப் பக்குவப்படுத்தி தன் மகளின் பொதுவாழ்க்கைக்கு ஒப்புதல் அளிக்க வைக்கிறது என்பதும் தன்போக்கிலேயே கதைக்களத்திலேயே வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் கூறப்பட்டுள்ளது.

“அம்மாவோ – அப்போதுதான் முதன்முதலாக முட்டையை உடைத்து வெளியே வரும் கோழிக்குஞ்சு அலகை மாத்திரம் வெளியே நீட்டிவிட்டு பின்னர் உள்ளுக்குள் இழுத்துக் கொள்வது போல் உலகைக் கண்டு பயப்படுகிறாள்”

என்பனப் போன்ற வரிகள் இவரின் நிலையைப் பிரதிபலிக்கின்றன. கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணின் சுதந்திரத்திற்கான முதல் முயற்சியையே இவரது நிலை தெளிவிக்கிறது. கூட்டை விட்டு வெளிவரும் கோழிக்குஞ்சை, பெண்ணியம் தேடும் பெண்களுக்கு உவமையாகக் கூறியுள்ளதன் மூலம், சமூகத் தேடல்களை படிப்பவர்களின் பார்வைக்கு இந்தப் புதினம் விட்டுவிடுகின்றது.

விதவை மணங்களைப் பற்றியக் குறிப்புகள், அந்தக் கால கை மருத்துவக் குறிப்புகள் முதலியவையும் இந்தப் புதினத்தில் காணக் கிடைக்கின்றன.

மொத்தத்தில் பெண் என்பவள் ஆக்கும் சக்தியாக மட்டுமல்லாமல், அவளுக்கானத் தேடல்களை நோக்கியப் பயணங்களை எதிர்நோக்குபவளாகவும் உள்ளாள் என்பதை பறைசாற்றுகின்றது இந்தப் புதினம்.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்